மலேசியா : இன்று முதல் அமலுக்கு வரும் இரண்டாம்கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு

malaysia eco

மலேசியாவில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலில் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகின்றது. mco என்று அழைக்கப்பட்டும் இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த தடை மேலும் நீடிக்கப்படாமல் இருக்க மலேஷியா மக்கள் ஒத்துழைக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் அடிக்கடி தங்களது கைகளை சோப்பு அல்லது கிருமி நாசி உள்ளிட்டவைகளை கொண்டு அடிக்கடி கழுவுமாறும் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வாரகாலம் மக்கள் தங்களை சிறந்த முறையில் தனிமைப்படுத்தி கொண்டு அரசுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசு அறிவித்ததுபோல இந்த இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தினசரி காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்படுகிறது. மேலும் உணவகங்கள் மற்றும் ஸ்டால்களுக்கும் அதே நேரத்தை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் இந்த இக்கட்டன சூழலில் மக்கள் பயன்படுத்தும் முகமூடிக்கு புதிய உச்சவரம்பு விலையை அரசு தலா RM1.50 என்று நிர்ணயித்துள்ளது.