மலேசியா : தொடர்ந்து உயரும் வேலை இழப்பு சதவிகிதம்..!! – மேலும் அதிகரிக்க வாய்ப்பு..?

malaysia economy

மலேசியாவில் கடந்த 4 மாத காலமாக கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த 2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் வேலை இழப்பின் சதவிகிதம் சுமார் 42 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை தற்போது சமூகப் பாதுகாப்பு அமைப்பின், வேலை காப்புறுதி பிரிவு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த நோயின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், பொருளாதார நிலையங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய அளவில் முடக்கம் அடைந்தது. அதுவே வேலை இழப்பின் மீதான தாக்கம் என்று கருதப்படுகிறது. பொருளாதார துறைகள் முடக்கத்தால் சுமார் 37 சதவிகித வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கவலை அளிக்கும் விதமாக இந்த விகிதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா காரணமாக மலேஷியா மற்றும் இன்றி உலகின் பல வல்லரசு நாடுகளில் இதே நிலை தொடர்வது மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.