‘ஹரி ராயா’ முடியும் வரை நடமாட்டக் கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும் – மலேசிய மருத்துவக் குழு

hari raya

உலக அளவில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குழிவித்துள்ள இந்த கொரோனா காரணமாக 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், முறையான சமயத்தில் ஊரடங்கினை கடைப்பிடித்ததால் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக பெரிய அளவில் அங்கு புதிய பாதிப்புகள் ஏற்படவில்லை. மேலும் அங்கு பல இடங்களில் பொதுச் சேவையும், பேருந்து, ரயில்கள் மற்றும் விமான சேவையும் மீண்டும் தொடங்கி உள்ளன.

உலகின் பல நாடுகளை போல மலேசியாவில் தற்போது MCO (Movement Control Order) எனப்படும் பொது நடமாட்டக் கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்த தடை நிகழ்வதால் பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அன்றாட ஊதியத்தை நம்பி வாழும் சாமானிய மக்களின் வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ஹரி ராயா’ எனப்படும் Eid al-Fitr முடியும் வரை கட்டாயம் இந்த பொது நடமாட்டக் கட்டுப்பட்டு அமலில் இருக்க வேண்டும் என்று மலேசிய மருத்துவ குழு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

தற்போது நிலவும் சூழலில் தற்போது உள்ள தடையை தளர்த்தினால், மக்கள் பெருமளவில் குழுக்களாக ஒன்றுகூடக் கூடும், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது.