“தொற்றின் அளவு மூன்று இலக்கத்தை நெருங்கினாள் மீண்டும் MCO அமலுக்கு வரலாம்” – மூத்த அமைச்சர்..!

Malaysia Corona
Image Tweeted by Astro AWANI

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று 13 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 8897 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மட்டும் 6 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 8600 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.7 சதவிகிதமாக ஆக உள்ளது.

இந்நிலையில் மலேசியாவில் உள்ளூரில் ஏற்படும் தொற்று தினமும் அதிகரித்து வருவதால் தொற்றின் அளவு மூன்று இலக்கத்தை நெருங்கும் நிலையில் மீண்டும் மலேசியாவில் MCO அமலுக்கு வர வாய்ப்புள்ளது என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி தெரிவித்துள்ளார்.