‘காவல்துறை அதற்கு அனுமதி அளிக்க தயாராக உள்ளது’ – ஐ.ஜி.பி. அப்துல் ஹமீட் பாடோர்

malaysia igp

கடந்த சில வாரங்களாக மலேசியாவில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களால் அங்கு அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்று வந்தன. தற்போது இந்த போராட்டங்கள் மற்றும் அமைதி பேரணிகள் குறித்து ஐ.ஜி.பி. அப்துல் ஹமீட் பாடோர், தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘மலேஷியா இன்று’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறவழியில் அமைதி பேரணி நடத்துபவர்கள், மெர்போக் மைதானம் அல்லது வேறு எந்த மைதானத்திலோ கூடி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் மலேஷியா காவல்துறை அதற்கு அனுமதி அளிக்க தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சட்டத்துறையை சார்ந்த மக்கள் தயவு செய்து காவல்துறை உங்களை ஒடுக்குகிறது என்று சொல்லாதீர்கள். நீங்கள் போராட விரும்பும் சந்தர்ப்பத்தில் அமைதியாக, உரிய அனுமதியுடன் மெர்போக் மைதானத்தில் கூடுங்கள் அது இல்லை என்றால் அருகில் உள்ள ஒரு அரங்கை வாடகைக்கு எடுங்கள், அங்கு உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். மலேசியர்களாக உங்களுக்கு அதற்கு முழு அதிகாரம் உண்டு என்று அவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த அரசியல் குழப்பங்களால் ஏற்படும் ஆர்ப்பாட்டங்களில் முன்னாள் பிரதமர் மகாதீரின் மகள் மரினா உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் போலிஸாரால் விசாரிக்கப்பட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.