“கொரோனா இன்னும் நம்மைச் சுற்றி தான் உள்ளது” – விழிப்புராணவு பதிவு வெளியிட்ட மூத்த அமைச்சர்..!

Ismail Sabri
Image tweetd by Ismail Sabri

மலேசிய அரசு கோவிட் 19 தொற்று பரவ தொடங்கிய காலத்தில் இருந்து கடுமையான சட்டங்களை விதித்து மக்களை பாதுகாத்து வருகின்றது. உலக அளவில் பிற நாடுகளை விட மலேசிய இந்த தொற்று நோய்க்கு எதிரான போரில் சிறந்து விளங்கிவருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பிய ஒருவர் மூலமாக சுமார் 40-க்கும் அதிகமான பேருக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில் Nasi Kandar என்ற அந்த உணவகத்தின்உரிமையாளருக்கு ஐந்து மாதம் சிறை மற்றும் 12,000 ரிங்கிட் அபராதம் அண்மையில் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மலேசியாவில் சுமார் 11 பேருக்கு உள்ளூரில் தோற்று ஏற்பட்டுள்ளது, தொற்றின் அளவு குறைந்தாலும் இன்னும் கொரோனா முழுமையாக சீராகவில்லை. தற்போது மலேசியாவின் மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில் “COVID-19 வைரஸ் இன்னும் நம்மைச் சுற்றி உள்ளது. அதனால் தான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் நமது அன்றாட நடவடிக்கைகளில் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக, நெரிசலான பொது இடங்களில் முகமூடி அணிந்து பொது இடத்தில் இருக்கும்போது முறையான சமூக இடைவெளி அனுசரிதல் போன்ற விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms