COVID – 19 : ‘பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது..!!’ – நூர் ஹிஷாம் அப்துல்லா

Noor hisham

மலேசியாவில் நேற்று, இருந்தவரை இல்லாத அளவிற்கு மிக குறைந்த அளவிலான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியான அரசு அறிக்கையின் அடிப்படையில் சுமார் 15 பேர் புதிதாக நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா நோன்பு பெருநாள் முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமானதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், 16 மே 2020 முதல் நேற்று வரை மலேஷியா முழுவதும் சுமார் 2,449,556 வாகனங்கள் காவல்துறையினரால் சோதனைசெய்யப்பட்டுள்ளது. “அதே போல வெளியான அறிக்கையின் அடிப்படையில் சுமார் 18,303 வாகனங்கள் மீண்டும் ஊர்களுக்குத் திரும்பும் அடிப்படையில் மாநிலங்களைக் கடக்க முயன்றுள்ளன என்றும் ஆனால், அவை காவல்துறை அதிகாரிகளால் திரும்பி செல்ல உத்தரவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வை தேவை இன்றி பயன்படுத்தி அதை மீறினால் மீண்டும் நோய் தொற்றின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.