‘மலேசிய எல்லைகளை தற்போது திறக்க வாய்ப்பில்லை..!!’ – மலேசிய சுகாதார அமைச்சகம்

Malaysia border

வெளிநாடுகளை இருந்து தாயகம் திரும்பிய சுமார் 360 மலேசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் இயக்கக் கட்டுப்பாட்டின் கடைசி பகுதியாகத் தான் மலேசிய எல்லை பகுதிகள் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய பலருக்கு சோதனை நடத்தும்போது, முதற்கட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனாவிற்கான அறிகுறி இல்லை என்றும் அதை தொடர்ந்து தனிமைப்படுத்துதலில் இருந்த அவர்களுக்கு சில நாட்கள் கழித்து மீண்டும் சோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகையால் தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் சுகாதார முன்னெச்சிரிக்கையாக மலேசிய எல்லைகள் தற்போது திறக்கப்படமாட்டாது என்று அவர் அறிவித்துள்ளர். கடந்த மே 4ம் தேதி முதல் சில பொருளாதார துறைகள் இயங்க அரசு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.