கட்டணத்தை சற்று குறைக்கலாம்..!! – வினமான நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கும் மூத்த அமைச்சர்..!!

ismayil sabari yakob
Image tweeted by Ismail Sabri Yakob

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கிய ஊரடங்கு சில தளர்வுகளோடு தற்போது வரை அமலில் உள்ளது. அதே சமயம் மலேஷியா மட்டும் இன்றி உலக அளவில் பொது போக்குவரத்து குறிப்பாக விமான போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சில நாடுகளில் உள்நாட்டு விமான சேவை அனுமதிக்கப்பட்டால் குறைந்த அளவிலான பயணிகளை கொன்டே பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சர் திரு. இஸ்மாயில் சபரி யாக்கோப் வெளியிட்டுள்ள அறிக்கையில் விமான சேவை நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் கட்டணங்களை சற்று குறைத்துக்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். 60 சதவிகித மக்களை கொண்டு விமானங்கள் இயங்கலாம் என்று அறிவித்த நிலையில் கட்டணங்கள் அதிகரித்திருப்பதாகவும் ஆனால் அதில் சில சலுகைகளை நிறுவனங்கள் அறிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தற்போது நிலை சீர் அடைந்து வந்தாலும் இன்னும் முற்றிலுமாக மலேசிய கொரோனா பாதிப்பில் இருந்து அகலவில்லை என்றால் அது மிகையல்ல.