“ஜனவரி 2021 தைப்பூசத்திருவிழா” – மலேசியாவில் சில மாற்றங்களுடன் கொண்டாடப்பட்டும்.!

Thaipusam 2021
File Twitter Image

உலகம் முழுக்க உள்ள ஹிந்து மக்களால் வெகு விமர்சயாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வுதான் தைப்பூசம். மலேசியாவிலும் இந்த திருவிழா தை மாதத்தில் கொண்டாடப்படும். (Thaipusam 2021)

இவ்வாண்டு தொடக்கத்தில் கொரோனா பரவி வந்த நிலையில் இவ்வாண்டு நடைபெறவிருந்த தைப்பூசத் திருவிழா தடைபெற வாய்ப்பு உண்டு என்று கருதப்பட்டது. (Thaipusam 2021)

Aisha Shah – அமெரிக்க அதிபரின் டிஜிட்டல் குழுவில் இந்திய பெண்.!

இந்த இக்கட்டான சூழலிலும் அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலரின் முயற்சியால் இந்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி இந்த தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

உலக சுகாதாரத்திற்கு அவசரநிலையை அப்போது பிரகடனம் செய்தது உலக சுகாதார மையம். திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என்று அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் மிகவும் கவனத்துடன் செய்யலப்பட அறிவுறுத்தியது.

இருப்பினும் வெகு விமர்சையாக உற்சாகத்துடன் தைப்பூசத்திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி மலேசியாவில் பொது நடமாட்டக்கட்டுப்பாடு மலேசியாவில் விதிக்கப்பட்டது.

10 மாதங்கள் கடந்த நிலையில் தொற்றின் அளவு குறையாத காரணத்தால் பொது தடை இன்றளவும் மலேசியாவில் நீடித்து வருவது நம்மால் பார்க்கமுடிகிறது.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு தைப்பூசத்திருவிழா சில மாற்றங்களுடன் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் வெள்ளி ரதம் பல இடங்களில் நின்று இறுதியாக பிரசித்திபெற்ற மலேசிய பத்து மலை கோவிலை அடையும்.

இதற்காக ரதம் செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் வைக்கப்படும். ஆனால் இம்முறை தண்ணீர் பந்தல் வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரதம் மாரியம்மன் கோவிலில் புறப்பட்டு, வழியில் எங்கும் நில்லாமல் பத்துமலை கோவிலை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram

Twitter

* Instagram