“நிலைமை சீரானால் தடை நீக்கப்படலாம்” – மலேசிய சுகாதார அமைச்சகம்.

Corona Deaths Malaysia
Image tweeted by KKMalaysia

ஜொகூர், திரெங்காணு மற்றும் கெடா ஆகிய பகுதிகளில் தொற்றின் அளவு குறைந்தால் அந்த மூன்று பகுதிகளில் தடையை நீக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. (Kedah Johor)

மலேசியாவில் வெகு நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கையில் சபா முதலிடம் வகித்தது. இந்நிலையில் தற்போது சபா-வை பின்னுக்கு தள்ளியுள்ளது தலைநகர் கோலாலம்பூர். (Kedah Johor)

168 பயணிகளுடன் பறந்த சிறப்பு விமானம்.!

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

“கல்வி நிறுவனங்களை திறக்க முயற்சிக்க வேண்டும்”

இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 1103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 48520 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று மட்டும் 821 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை மொத்தம் 35606 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜொகூர், திரெங்காணு மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் நல்ல முன்னேற்றம் தெரிந்து வருவதாகவும்.

இந்த நிலை நீடித்தால் அங்கு தடை விலக்கப்பட வாய்ப்பு உண்டு என்று அரசு தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட தடைக்கு பிறகு அங்கு தொற்றின் அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று ஜொகூர் மாநிலத்தில் 8 பேருக்கும், திரெங்காணுவில் 4 பேருக்கும் மற்றும் கெடாவில் 10 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram