மூடப்படாத ஆழ்துளை கிணறு : சுஜித்தின் ஐந்து நாள் போராட்டம்..!

Sujith
Image Courtesy Deccan Chronicle

இந்த 2020ம் ஆண்டு பலருக்கும் நல்ல ஆண்டாக அமையவில்லை. அதே போல கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி சுஜித் (Sujith) என்ற பச்சிளம் குழந்தையின் மரணம் நம்மை சோகக்கடலில் ஆழ்த்தியது.

அண்டை நாடான இந்தியா மட்டும் அல்ல உலக அளவில் ஆழ்துளை கிணறுகளும் அதனால் ஏற்படும் மரணங்களும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. அதே போலத் (Sujith) தான் சுஜித் மரணமும்.

வரவிருக்கும் தீபாவளியை இன்பமாய் எதிர்நோக்கி. புத்தாடை, பட்டாசு என்று பல கனவோடு வளம்வந்த சுஜித்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி தனது வீட்டின் அருகில் இருந்து இருந்த ஒரு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

இதையும் படிங்க : “மலேசியாவில் வேகமெடுக்கும் கொரோனா” – ஒரே நாளில் 1228 பேர் பாதிப்பு..!

தகவல் ஊரெங்கும் பரவியது, youtube சேனல் முதல் முன்னணி செய்தி நிறுவனங்கள் வரை பலரும் அங்கு குவிந்தனர். அதனோடு சேர்ந்து மீட்பு பணியும் விரைவாக தொடங்கியது.

சுஜித் ஒரு கையில் சுருக்கை இட்டு அவன் மேற்கொண்டு கீழ்நோக்கி செல்லாமல் தடுக்கப்பட்டது. அடுத்து அடுத்து மூன்று ராட்சச இயந்திரங்கள் வந்திறங்கின மீட்புக்கு.

நேரம் கடந்தது, நாட்களும் நகர்ந்தது. அம்மா, அம்மா என்று அழுதுகொண்டு தாய் சொன்ன ஆறுதலுக்கு ம்.. கொட்டிய தொண்டை வறண்டது.

நாட்கள் ஐந்து போராடி அக்டோபர் மாதம் 30ம் தேதி அதிகாலை 2.00 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டு, தனது இறப்பில் பாடம் புகட்டிச்சென்றான் சுஜித்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram