பொருத்தம் பார்க்கும் இணையம் மூலம் விபச்சாரம்.? – மலேசிய ஆடவர் கைது.!

Sugar Book Malaysia
Picture Courtesy WAAY Tv

Sugar Book எனப்படும் பொருத்தம் பார்க்கும் இணையதளத்தின் மூலம் விபச்சாரம் செய்து வந்ததாக கூறி மலேசியாவை சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (Sugar Book Malaysia)

இந்த நிகழ்வு குறித்து மலேசியா மெயில் செய்தி நிறுவனம் தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (Sugar Book Malaysia)

“புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” – தடுப்பூசி போடத்தவரும் முதலாளிகளுக்கு சிறை.!

மலேசியாவின் பினாங் பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் இந்த நிகழ்வு குறித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Sugar Book எனப்படும் சேவை நிறுவனத்தை குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி இந்த இணையதளம் முடக்கப்பட்டது.

ஆனால் அதன் பிறகும் அந்த நிறுவனம் பிப்ரவரி 16ம் தேதியே வேறு ஒரு இணையத்தின் மூலம் சேவையை அளிக்கத்தொடங்கியதாகவும் மலேசியா மெயில் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் நடமாட்டக்கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற இணையதளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த ஆடவர், போலீசாரிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் அந்த நிறுவனத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை என்பது சுமார் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.

விஞ்ஞானம் அதிகரித்து காணப்படும் இதுபோன்ற காலகட்டத்தில் உலக அளவில் இதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த Sugar Book தொடர்புடைய அணைத்து இணையத்தளங்களும் முடக்கப்பட்டு அது குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram