கொரோனா : மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறினால் 6 மாத சிறை..?

malaysia stay

உலகத்தின் பல நாடுகளை போலவே மலேசியாவிலும் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழலில் இரண்டாம் கட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. mco என்று அழைக்கப்பட்டும் இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த mco நடமாடக்க கட்டுப்பாட்டை பொறுத்தவரை மக்கள் யாரும் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவை தாண்டி செல்லக்கூடாது என்பதே அதன் முக்கிய அம்சம். உணவு, மளிகை, மருந்து என்று எல்லா தேவைகளுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வாரகாலம் மக்கள் தங்களை சிறந்த முறையில் தனிமைப்படுத்தி கொண்டு அரசுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசு அறிவித்ததுபோல இந்த இரண்டாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தினசரி காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்படுகிறது. மேலும் உணவகங்கள் மற்றும் ஸ்டால்களுக்கும் அதே நேரத்தை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.

அதே போல இந்த தடையை மீறும் நபர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் அல்லது RM1000 வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கிப்பட்டுள்ளது .