மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு – கோழி முட்டைக்கு ஏற்பட்ட பற்றாக்குறை

egg shortage

தற்போது மலேசியா மட்டும் இன்றி உலக நாடுகள் அனைத்தும் பரவி வரும் கொரோனா நோயின் காரணமாக முடங்கிப்போய் உள்ளது. ஆனால் இந்த சிக்கலான சூழ்நிலையில் சிறிய ஆறுதலாக மலேசிய நாட்டில் 600-க்கும் அதிகமானோர் இந்த நோயில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் தற்போது சீனாவில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகின்றது. அங்கு மீண்டும் வௌவ்வால் விற்பனை மீண்டும் சூடுபிடித்துள்ளது என்ற தகவலும் வருகின்றது.

இந்நிலையில் மலேசியாவில் நிலவி வரும் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை அடுத்து அங்கு கோழி முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மலேசியா கால்நடை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டான் சீ ஹீ சராசரியாக ஒரு மலேஷியா குடும்பத்தில் வாரத்திற்கு 10 முதல் 35 முட்டை வரை வாங்கப்படும். ஆனால் தற்போது இந்த கட்டுப்பட்டால் ஒரு குடும்பத்தில் 80 முதல் 100முட்டைகள் வரை வாங்கி இருப்பு வைப்பதால் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாக அறிவித்துள்ளார்.

மக்கள் பீதியில் முட்டைகளை வாங்கி சேமிக்காமல் இருந்தாலே இந்த தட்டுப்பாடு இருக்காது என்று டான் கூறியுள்ளார். நிலவும் இந்த பொது நடமாட்டக் கட்டுப்பாடு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வருவது மக்கள் கையில் தான் இருக்கிறது என்று அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.