மே 12 வரை நீடிக்கப்பட்ட கட்டுப்பாடு : நோம்புப் பெருநாள் வரை நீடிக்க வாய்ப்பு – மலேசிய பிரதமர்

muhyiddin about mco

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உலகம் முழுக்க கொரோனா காரணமாக 26 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியவிலும் 5000-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் பாதிப்பு பரவாமல் இருக்க சென்ற மார்ச் மாதம் 18ம் தேதி இந்த பொது நடமாடக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 14ம் தேதி வரை நிலவிய தடை அதன் பிறகு மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கப்பட்டு ஏப்ரல் 28ம் தேதி வரை மீண்டும் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் சிறிய அளவில் மலேசியாவில் கொரோனவால் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடு நீடிக்கப்படுகிறது என்று நேற்று இரவு மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார்.

நேற்று இரவு தொலைக்காட்சி மூலம் மக்களுடன் பேசிய பிரதமர், இந்த கட்டுப்பட்டு நீடிக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த கட்டுப்பட்டு நோம்புப் பெருநாள் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.