மிரட்டும் கொரோனா – ‘மலேஷிய அரசு விதித்த அடுத்த தடை’

passenger ship

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் தோன்றி தற்போது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது கொரோனா வைரஸ் நோய் தொற்று. மலேசியாவில் ஆரம்ப நிலையில் மிகவும் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நோய் தொற்று தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே வெளிநாட்டவர்களுக்கு பல தடைகளை விதித்த மலேஷியா, புதிதாக அடுத்த ஒரு தடையை விதித்துள்ளது.

மலேசிய பிற நாடுகளில் இருந்து வரும் பயணக் கப்பல்கலின் வருகைக்கு விரிவான தடையை தற்போது விதித்துள்ளது. சுகாதார அமைச்சகம் மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து தற்போது மலேசியாவில் இந்த தற்காலிக தடை உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஸ்டார் நாளிதழ் தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த தடை குறித்து பினாங்கு துறைமுக ஆணையம், சொகுசு கப்பல் மற்றும் அனைத்து வித கப்பல் உரிமையாளர்கள், துறைமுக அதிகாரிகள் என்று அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மலேஷியா அரசிடம் இருந்த அடுத்த அறிவிப்பு வரும்வரை இந்த தடையானது நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.உலக முழுவதும் பரவும் இந்த நோயை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன.