நாடு திரும்பும் மலேசியர்கள் – 14 நாட்கள் அளிக்கப்படும் தீவிர சிகிச்சை

malaysians in wuhan

மலேசியாவில் இருந்து வுஹன் நகரத்திற்கு சென்றுள்ள ஏர் ஏசியா விமானம் அங்கிருந்து சுமார் 141 பயணிகளுடன் தாயகம் திரும்ப உள்ளது. பரவி வரும் கொரோனா நோய் தொற்று எந்த விதத்திலும் தங்களது நாட்டிற்குள் பரவி விட கூடாது என்பதில் மலேசியா அரசு மிக தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் வுஹன் நகரில் இருந்து வரும் மலேசியர்கள், அவர்களை மீட்க சென்ற 12 பேர் கொண்ட குழு மற்றும் அவர்கள் உடன் சென்ற எட்டு அதிகாரிகள் என்று அனைவருக்கும் நாடு திரும்பியதும் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படும் என்றும். அவர்கள் சுமார் 14 நாட்கள் தனிமைபடுதப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிகின்றன.

ஆனால் மலேசியாவில் அவர்களை எங்கே தங்க வைக்கப்போகிறார்கள் என்ற தகவல் தற்போதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர சிகிச்சைக்கு பின்னரே நோய் தொற்றால் பாதிப்பு இல்லாதவர்கள் மட்டுமே சிகிச்சை முடிந்த பின்னர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் இந்த நோய் தொற்றுக்கு மருந்து கண்டிபிடிகப்படுள்ளதாகவும், அந்த மருந்தினை கொண்டு சிலர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன. ஆனால் அந்த புதிய மருந்தினால் சிலருக்கு சில ஒவ்வாமைகள் ஏற்படுவதாகவும் தகவல் தெரிவிகின்றன.