சிங்கப்பூர் – மலேசிய இடையிலான சிறப்பு பயண ஏற்பாடுகள் – இருநாட்டு பிரதமர்கள் பேச்சுவார்த்தை..!!

Sinapore Border

இந்த கோவிட் – 19 சூழ்நிலையில் மலேசிய மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் அனுதினம் சென்று வரும் பயணிகளின் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் மலேசிய அரசுடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் அரசு ஆயத்தமாக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்தார். இதில் குறுகிய கால தொழில்துறை மற்றும் அதிகாரபூர்வ பயணிகளாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே சென்று வருபவர்களும் அடங்குவர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்த பயண நடவடிக்கை குறித்து இரு நாட்டு பிரதமர்களும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். தற்போது அதிகாரபூர்வப் பயணங்கள் மற்றும் அத்தியாவசிய வர்த்தகத்திற்கு இருநாடுகளுக்கு இடையில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும் நீண்டகால குடிநுழைவை குறிக்கும் அட்டை உடைய சிங்கப்பூரர்களும் மலேசியர்களும் தற்போது வர்த்தகத்துக்காகவும் பணி நிமித்தமாகவும் இருவழி பயணத்தை மேற்கோள் அனுமதிக்கப்படுவர்.

இரு நாடுகளிலும் கொரோனா தொற்று முழுமையாக நீங்கவில்லை என்றபோது தொற்றின் அளவு குறைந்து வருவதால் இந்த நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.