“கோலாலம்பூர் to இந்தியா” – அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் சிறப்பு விமானங்கள்.!

Special Flights India
Image tweeted by India in Malaysia

நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மேலும் சில சிறப்பு விமானங்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டுள்ளது. (Special Flights India)

315 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து கொச்சி உள்ளிட்ட பல இடங்களுக்கு அந்த விமானங்கள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (Special Flights India)

“மலேசியா – அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கட்டாய கோவிட் 19 சோதனை.?”

ஆனால் இந்த வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் விமானங்களில் மூன்று மடங்கு வரை விமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த இக்கட்டான சூழலில் வேலை இழந்து, உன்ன வழியின்றி தாயகம் நோக்கி திரும்ப ஆவலுடன் இருக்கும் மக்களுக்கு இது பெரும் இடியாக இருக்கின்றது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிற விமான சேவைகளை மலேசியாவிற்கு அளிக்காமல். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் பலர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

பிற விமான சேவைகளை வழங்க தொடங்கினாள் தங்கள் போக்குவரத்துக்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்று பயணிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கத்திற்கு மாறாக மூன்று மடங்கு வரை கட்டணம் வந்தே பாரத் திட்டத்தில் வசூலிக்கப்படுவதாக மக்கள் வருத்தம் தெரிவிப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது.

பஹ்ரைன், டோஹா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு இந்த வந்தே பாரத் சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. (Special Flights India)

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram