திறந்தவெளி திரையரங்குகள் துவங்க விரைவில் அனுமதி வழங்கப்படும்..? – மலேசிய அரசு..!

Open Air Theaters
Photo Courtesy : boardsheet.com.au

மலேசியாவில் மீட்சிக்கான தளர்வுகள் படிப்படியாக கடந்த மே மாதத்தில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. வணிக நிறுவனங்கள் பல திறக்கப்பட்டு வரும் நிலையில் பள்ளிகளும் விரைவில் திறக்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மலேசியாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு மீட்டர் என்ற முறையான சமூக இடைவெளி கடைபிடிப்பதோடு முறையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு சுமார் 250 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. மேலும் மலேசியாவின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கும் சில்லறை விற்பனைத்துறை, பயணத்துறை ஆகிய சங்க உறுப்பினர்களுடன் தளர்வுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை ஒன்றையும் அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் அப்போது நடத்தினார்.

இந்நிலையில் மலேசியாவில் திறந்தவெளி திரையரங்குகள் துவங்க அனுமதி அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலேசியர்கள் பலர் பல காலமாக எதிர்பார்த்து வந்த இந்த திறந்தவெளி திரையரங்குகள் திறப்பது குறித்தும், அதில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தம் SOP விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.