COVID – 19 : மீண்டும் அதிகரிக்கும் தொற்று – பினாங்­கில் மீண்டும் அமுலுக்கு வரும் கட்டுப்பாடு..?

penang Malaysia
Picture Courtesy the Straight times

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று 12 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 9212 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மட்டும் 17 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 8876 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.4 சதவிகிதமாக ஆக உள்ளது.

மேலும் இன்று கொரோனா காரணமாக மலேசியாவில் யாரும் மரணிக்காத நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 125ஆக உள்ளது. இந்நிலையில் பினாங் பகுதியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொற்று இல்லாமல் இருந்துவந்த நிலையில் தற்போது சமூகத்தில் தொற்று பரவிவருவதை அடுத்து அங்கு கட்டுப்பாடுகள் விதிக்க சுகாதார அமைப்புகள் மற்றும் நகர மன்றங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு கடைகள் மற்றும் பொது இடங்களில் மீண்டும் கட்டுப்பாடு அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms