சிவகங்கை கிளஸ்ட்டர் : உணவக உரிமையாளர் 10 லட்சம் இழப்பீடு தரக்கோரி வழக்கு பதிய முடிவு..?

Sivagangai Cluster
Photo courtesy malaysia.com

உலக அளவில் பரவி வரும் இந்த உயிர்கொல்லி வைரஸை தடுக்க மலேசிய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதே சமயம் அதில் வெற்றியும் பெற்று வருகின்றது. ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் முகக்கவசத்தையும் கட்டாயமாகியது. இந்நிலையில் கடந்த ஜூலை 13ம் தேதி தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பியவர் (நிரந்தர குடியுரிமை பெற்றவர்) நோய் தொற்று இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஹோட்டல் உரிமையாளரான இவர் தனிமைப்படுத்துதல் காலத்தில் தடையை மீறி வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் கெடா பகுதியில் அவர் மூலமாக அப்போது மேலும் நால்வருக்கு தொற்று உறுதியானது.

இந்நிலையில் அவரது கடைக்கு கடந்த ஜூலை 13 முதல் 27ம் தேதி வரை சென்றவர்கள் அவர்களாக முன்வந்து அருகில் உள்ள சுகாதார மையத்தில் கோவிட் 19 பரிசோதனையை செய்துகொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இருவருக்கு தொற்று உறுதியான நிலையில் மேலும் ஒருவருக்கு தொற்று என்று கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலருக்கு தொற்று உறுதியாகி வருகின்றது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் தொற்றின் அளவு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதுவரை 45 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல், அந்த குறிப்பிட்ட உணவகத்தில் உணவருந்தியவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு நாளாக இந்த சிவகங்கை விவகாரமாக யாரும் பாதிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் Bernama என்ற செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்த சிவகங்கை கிளஸ்ட்டர் விவகாரத்தில் முக்கிய நபராக கருதப்படும் Napoh பகுதியில் உள்ள Nasi Kandar கடையின் உரிமையாளர்களுக்கு 5 மாதம் சிறை தண்டனையும் RM12,000 வித்தியாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ் மலர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் நாசி கண்டார் உணவாக உரிமையாளறுக்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் 10 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms