‘ஜோஹோர் பரு ரயில்பாதை’ – விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்

Malaysian-Ministers

ஜோஹோர் பரு, மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஒரு நகரம், தற்போது சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையே ரயில் இணைப்புத் திட்டம் தொடர்பான ஒரு ஒப்பந்தம் வரவிருக்கும் ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவடைவதில் இரு நாடுகளும் கடப்பாடு கொண்டுள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்து ஆண்டனி லோக் தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை அளித்துள்ளார். அந்த பதிவில், தாம் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானைச் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையிலான ரயில் இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றத்தை பற்றியும் விவாதித்ததாக அவர் கூறினார். மேலும் தானும் அமைச்சர் கோ பூனும் பரிமாறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு இடையே ஒரு மணி நேரத்திற்கு சுமார் 10,000 பயணிகள் பயன்படுத்தக்கூடிய இந்தச் சேவை ஜோகூர் கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கம் கொண்டது என்று பலர் கூறுகின்றனர். மேலும் இந்த திட்டம் வரும் 2024ம் ஆண்டு நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.