‘ஆர்டிஎஸ் ரயில் திட்டம்’ : இம்மாத இறுதிக்குள் வடிவம் பெரும் – மாலேசிய அரசு உறுதி..!!

Malaysia Singapore - RTS
Photo Courtesy : todayonline.com

ஜோஹோர் பரு, மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஒரு நகரம், தற்போது சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையே ரயில் இணைப்புத் திட்டம் தொடர்பான ஒரு ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய இரு நாடுகளும் முயற்சித்துள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் பல மாதங்களுக்கு முன்பு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு குறித்து ஆண்டனி லோக் தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை அளித்தார். அந்த பதிவில், தாம் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானைச் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையிலான ரயில் இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றத்தை பற்றியும் விவாதித்ததாக அவர் கூறினார். மேலும் தானும் அமைச்சர் கோ பூனும் பரிமாறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

4 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்துவரும் இந்த நிகழ்வில் சுமார் 222 பிரச்சனைகள் பேசி முடிவு காணப்படவேண்டியுள்ள நிலையில் 220 பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மீதமுள்ள பிரச்சனைகளும் இந்த மாத இறுதிக்குள் பேசி தீர்க்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.