“மலேசியாவின் பனி இளவரசி” – ஸ்ரீ அபிராமியின் கனவுகள் நிறைவேறுமா.?

Skating Abiramee
Image Tweeted by Malaysian Indian Congress

ஸ்ரீ அபிராமி, மலேசியாவில் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டின் இளவரசி என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு அசத்திய குழந்தை என்பது பலரும் அறிந்ததே. (Shree Abiramee)

சிறு வயது முதலே ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இந்த சின்னச்சிறு உள்ளம் வெறும் 7 வயதில் பல பதக்கங்களை குவித்து வருகிறாள். (Shree Abiramee)

“90 சதவிகித வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தங்குமிட வசதி சரியில்லை”

அபிராமி தனது 5 வயதிற்குள் இரண்டு முறை Malaysia Book of Records-ல் இரு முறை இடம்பிடித்தவள் என்பது குறிப்பிடத்தக்கது.

7 வயதிற்குள் உலக அளவில் பல நாடுகளில் நடைபெற்ற ஐஸ் ஸ்கேட்டிங் பந்தயங்களில் கலந்துகொண்டு பல பதக்கங்களை அடுக்கியுள்ளாள் இந்த சிறுமி.

மலேசிய முன்னாள் பிரதமர் முஹிதீன் அவர்கள் அபிராமியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்வியா நகருக்கு பயிற்சிக்காக சென்றபோது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட அவள் தனது தாய் தந்தையுடன் அங்கு சிக்கினால்.

பின்னர் தந்தை மட்டும் மலேசியா திரும்பிய நிலையில் தாயும் மகளும் லட்வியா நகரில் பயிற்சிக்காக தாங்கினார். இந்த கொரோனா காலகட்டத்தில் தொழிலதிபரான தந்தை பெட்டாலிங் ஜெயாவில் தனது கார்களை விற்று அவளுடைய பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்.

அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்று தற்போது கோரிக்கை வைத்துள்ளார். தனது மகள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு இன்னும் பல சாதனைகள் பெற வேண்டும் என்றார் அவர்.

தன்னுடைய இருப்பு அடுத்தாண்டிற்குள் தீர்ந்து விடும் என்றும், அரசு அவளுக்கு விறைத்து உதவி அவளை பயிற்சி மேற்கோள் உதவ வேண்டும் என்றார் அவர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram