“மாயமான ஊழியர்கள்” – தீவிர தேடுதலில் மலேசிய அதிகாரிகள்.!

Sepang Residents
Image Courtesy Bernama

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் உள்ளது செபாங் என்ற மாவட்டம். அந்த பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தற்போது தேடப்பட்டு வருகின்றனர். (Sepang Residents)

மலேசியாவில் இயக்கக்கட்டுப்பாடு அண்மையில் அமலில் வந்தது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருவதற்கு முன்னர் கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் வசித்து வந்த ஊழியர்களை தான் மலேசிய அதிகாரிகள் தேடி வருகின்றனர். (Sepang Residents)

“கொரோனா சிகிச்சை மையமாகும் மகப்பேறு வார்டு”

செபாங் மாவட்டத்தில் உள்ள திங்­கி­யில் இருக்கும் மேடான் 88 குடி­யி­ருப்பு பகுதியில் மலேசிய அரசு நடமாட்டக்கட்டுப்பாட்டை விதித்தது.

மேலும் முற்கம்பிகள் இட்டு அந்த இடத்தை தடை செய்தது. அங்கு உள்ள மக்களுக்கு போதிய அத்யாவசிய வசதிகளையும் அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த பகுதியில் தங்கியிருந்த சுமார் 400 குடியிருப்பு வாசிகள் கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்பு அந்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அவ்வாறு வெளியேறிவர்களுக்கு கோவிட் 19 சோதனை இன்னும் நடத்தப்படவில்லை என்றும் ஒரு தகவல் பிறவி வருகின்றது.

அவ்விடத்தில் தங்கியிருந்த ஊழியர்களை, அந்த ஊழியர்களின் முதலாளிகள் தான் பேருந்துகளை கொண்டு இடம் மாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த முதலாளிகளை கொண்டு அந்த ஊழியர்களை உள்ள இடங்களை கண்டறிய உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது அந்த ஊழியர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram