‘சிவப்பு மண்டலமாக மாறிய கூச்சிங்’ – மூடப்பட்ட பிரபல மருத்துவமனை..!!

Free Corona Checkup
Picture Courtesy thesundaily.my

மலேசியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக உள்ளூர் தொற்றே இல்லை என்ற தகவல் வெளியானது மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வீட்டில் தனிமைப்பட்டிருந்த பெண் ஒருவர் அரசு விதித்த சட்டத்தை மீறி பொதுவெளியில் நடமாடியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து அரசு வெளிநாட்டில் இருந்து திரும்புவோர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு பின்னரே இல்லத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தது. அதே சமயம் மலேசியாவில் சிவப்பு மண்டலங்களின் எண்ணிக்கை குறைந்த வந்த நிலையில் அண்மைக்காலமாக மீண்டும் வேகமெடுத்துள்ள உள்ளூர் தொற்றால் கூச்சிங் நகரம் மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.

மேலும் செண்டோசா என்ற மருத்துவமனையில் ஏற்கனவே 16 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் அங்கு மேலும் 4 புதிய தொற்றுக்கள் நேற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும். ஆதலால் அந்த மருத்துவமனை மக்கள் பயன்பாட்டில் இருந்து தற்காலிகமான பூட்டப்படுகிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு பணியாற்றுபவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/
?? Twitter      – https://twitter.com/malaysiatms