“சிலாங்கூர் – 8 மாதத்தில் 9000-க்கும் அதிகமானோர் வேலையிழப்பு”

Malaysia Singapore Border
Image Courtesy Malay Mail

மலேசியாவில், சிலாங்கூர் பகுதியில் கடந்த 10 மாத காலத்தில் சுமார் 9000-க்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக சிலாங்கூர் ஆள்பல இலாக்கா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. (Selangor News)

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 9400 பேர் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (Selangor News)

“சபா-வை பின்னுக்கு தள்ளிய கோலாலம்பூர்”

உலக அளவில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா பரவி வருகின்றது. இதுவரை 200-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.

வரவிருக்கும் டிசம்பர் மாதத்தோடு கொரோனா உலக அளவில் பரவ தொடங்கி 1 ஆண்டினை நெருங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தொற்று பரவலால் உலக பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. பல லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர்.

பல தொழில் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றது. போக்குவரத்தும் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலேசியாவை பொறுத்தவரை ஏற்கனவே சுற்றுலா துறை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளியாகி உள்ள தரவுகள் அடிப்படையில் சுமார் 9000 பேர் சிலாங்கூறில் வேலை இழந்துள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram