“புதிய உச்சத்தில் கொரோனா” – சிலாங்கூர் பகுதியில் 965 பேருக்கு தொற்று.!

Selangor Corona Update
Image Tweeted by Noor Hisham Abdullah

பரவலாக ஆசிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மெல்ல குறைய தொடங்கி உள்ளது. இந்நிலையில் மலேசியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. (Selangor Corona Update)

மலேசியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை அமலில் உள்ளது. நேற்று கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஒரு உச்சம் தொட்டுள்ளது. (Selangor Corona Update)

டெல்லி – கோலாலம்பூர் : இருமுனை பயணமாக பறக்கும் 9 விமானங்கள்.!

கடந்த சில வாரங்களாகவே 1000-க்கும் அதிக அளவிலேயே தொற்று எண்னிக்கை பதிவானது. ஆனால் நேற்று ஒரே நாளில் 2593 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட 2589 பேரில் 965 பேர் சிலாங்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் 571 பேர் ஜோஹோர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 2589 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய நான்கு பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களை எண்ணிக்கை என்பது 1,25,438 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1129 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 1,00,578 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று மட்டும் மலேசியாவில் 4 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 513 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram