“மார்ச் 1 முதல் மீண்டும் படி படியாக பள்ளிகள் திறக்கப்படும்” – ராட்ஸி ஜிடின்.!

Schools Reopen
Image Tweeted by Radzi Jidin

வரும் மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி, மலேசியாவில் பள்ளிகள் படி படியாக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்துள்ளார். (Schools Reopen)

மலேசியாவில் அண்மையில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கிய காரணத்தால் பள்ளிகள் ஜனவரி மாதம் வரை புடுத்தலில் இருந்தது. (Schools Reopen)

கோலாலம்பூர் – திருச்சி : மூன்று நாட்கள் மூன்று விமானங்கள்.!

மலேசியாவின் கல்வி அமைச்சர் (Education Minister) டாக்டர் திரு. ராட்ஸி ஜிடின் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 74 விழுக்காடு பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது கிளந்தான், சரவாக் போன்ற பகுதிகளில் மட்டும் தொற்று இல்லாத மாநிலங்களாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அங்கு பள்ளிகளிலும் தொற்று ஏதும் கண்டறியப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் நாடுமுழுவதும் உள்ள கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை மூட அப்போது முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தொற்றின் அளவு சற்று குறைந்து வருவதால், மீண்டும் பள்ளிகள் திறக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்ச் 1ம் தேதி முதல் பாலர் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பள்ளி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் மாதம் 8ம் தேதி பள்ளிகள் திறக்கும்.

அதற்கு அடுத்தபடியாக இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram