மலேசியா : ‘ஜூலை 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும்’ – அமைச்சர் ராட்ஸி ஜிடின்..!!

Mohd Radzi Md Jidin
Photo Courtesy : malaysiamail.com

கொரோனாவில் இருந்து தற்போது மலேசிய மெல்ல மெல்ல மீண்டு வர தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பல பொருளாதார துறைகள் திறக்கப்பட்டு வருகின்றது. அதே சமயம் இந்த வருடம் அரசு தேர்வு எழுத்தவுள்ள படிவம் ஐந்து மற்றும் படிவம் ஆறு பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூலை 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் முஹமது ராட்ஸி ஜிடின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்று மற்றும் நான்காம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 22ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு SOP (Strand Operating Procedure) எனப்படும் விதிக்கப்பட்டுள்ள சீரான விதிமுறைகளை பள்ளிகள் மேன்படுத்திக்கொள்ளலாம் என்று துணை கல்வி அமைச்சர் முஸ்லீமின் யாஹா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் இன்று புதிதாக ஐந்து பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மலேசியாவில் கொரோனா காரணமாக யாரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.