“மலேசியாவில் ஜனவரி 2021 வரை பள்ளிகள் மூடல்.?” – கல்வி அமைச்சகம்.!

Schools Closed
Image tweeted by Radzi Jidin

மலேசியாவில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கி இருப்பதால் இன்று தொடங்கி (நவம்பர் 9) இந்த கல்வியாண்டின் இறுதி நாள்வரை பள்ளிகளை மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. (Schools Closed)

மலேசியாவின் கல்வி அமைச்சர் (Education Minister) டாக்டர் திரு. ராட்ஸி ஜிடின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார். (Schools Closed)

“மலேசியாவில் டிசம்பர் 6 வரை கட்டுப்பாடு நீட்டிப்பு”

கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 74 விழுக்காடு பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான், சரவாக் போன்ற பகுதிகளில் மட்டும் தற்போது தொற்று இல்லாத மாநிலங்களாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு பள்ளிகளிலும் தொற்று ஏதும் கண்டறியப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் நாடுமுழுவதும் உள்ள கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை மூட தற்போது முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த கல்வி ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 17ம் தேதி வரை பள்ளிகளை மூட அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

அதே சமயம் முன்பு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாள்காட்டியின் அடிப்படையில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பூட்டுதல் காலத்தில் மாணவர்களை வீட்டிலிருந்து பாடம் கற்கும் நிலைக்கு பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடான இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram