“பள்ளிகள் மூடல்” – மலேசியாவில் அவதிப்படும் வேன் ஓட்டுநர்கள்.!

School Van Driver
Photo Courtesy KL Chronicle

பிற தொழில்களை போல மலேசியாவில் பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளி வாகன ஓட்டுநர்களும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். (School Van Drivers)

மலேசியாவில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கி இருப்பதால் கடந்த நவம்பர் 9 தொடங்கி இந்த கல்வியாண்டின் இறுதி நாள்வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. (School Van Drivers)

“அதிக கட்டணம் வசூலிக்கிறதா வந்தே பாரத்.?”

மலேசியாவின் கல்வி அமைச்சர் (Education Minister) டாக்டர் திரு. ராட்ஸி ஜிடின் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 74 விழுக்காடு பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளந்தான், சரவாக் போன்ற பகுதிகளில் மட்டும் தற்போது தொற்று இல்லாத மாநிலங்களாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு பள்ளிகளிலும் தொற்று ஏதும் கண்டறியப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் நாடுமுழுவதும் உள்ள கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளை மூட தற்போது முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த கல்வி ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 17ம் தேதி வரை பள்ளிகளை மூட அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

அதே சமயம் முன்பு அறிவிக்கப்பட்ட விடுமுறை நாள்காட்டியின் அடிப்படையில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பூட்டுதல் காலத்தில் மாணவர்களை வீட்டிலிருந்து பாடம் கற்கும் நிலைக்கு பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க பள்ளி மூடலால் பள்ளி வேன் ஓட்டுனர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தமிழ் மலர் செய்தி நிறுவனம் இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தாமான் மேடானில் பகுதியில் வசிக்கும் லட்சுமணன் என்ற அந்த பள்ளி வேன் ஓட்டுநர் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் இந்த ஆண்டு இறுதி வரை இயங்காததால் பள்ளி வேன்கள் இயங்க வாய்ப்பில்லை. இதனால் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. School Van Drivers

வண்டிக்கான லோன் தொகை, குடும்ப செலவு, போன்ற பல சிக்கல்களால் தாங்கள் அவதிப்பட்டு வருகின்றோம் என்று தெரிவித்தார் லட்சுமணன்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram