“இது கல்வி அமைச்சகத்தின் முடிவுக்கு விழுந்த பலத்த அடி” – முன்னாள் கல்வி அமைச்சர்.!

Sarawak Schools Closed
Twitter Image

கொரோனா தொற்று அதிகம் காணப்படும் (சிவப்பு மண்டலம்) பகுதிகளில் உள்ள பள்ளிகளை மார்ச் 14 வரை மூட சரவாக் மாநில பேரிடர் மேலாண்மை குழு அறிவித்துள்ளது. (Sarawak Schools Closed)

இந்த செய்தி, மார்ச் 1ம் தேதி பள்ளிகளை திறக்க ஆவணம் செய்த கல்வி அமைச்சகத்திற்கு விழுந்த பலத்த அடி என்று முன்னாள் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். (Sarawak Schools Closed)

“NPRA அங்கீகரிக்கும் அடுத்த தடுப்பூசியை முதலில் நான் ஏற்றுக்கொள்கிறேன்” – அமைச்சர் ஜமாலுதீன்

மலேசிய கல்வி அமைச்சகம் வரும் மார்ச் 1ம் தேதி முதல் பள்ளிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்தது.

ஆனால் முன்னாள் கல்வி அமைச்சர் தியோ நீ சிங்க் அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பை அப்போது வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பெரும்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்கும் இந்த முடிவு ஆபத்தை விளைவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் அண்மையில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கிய காரணத்தால் பள்ளிகள் ஜனவரி மாதம் வரை புடுத்தலில் இருந்தது.

மலேசியாவின் கல்வி அமைச்சர் (Education Minister) டாக்டர் திரு. ராட்ஸி ஜிடின் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தார்.

கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 74 விழுக்காடு பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது கிளந்தான், சரவாக் போன்ற பகுதிகளில் மட்டும் தொற்று இல்லாத மாநிலங்களாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram