“சபாவில் 5 மாநிலங்கள் மட்டுமே சிவப்பு மண்டலமாக உள்ளது” – நூர் ஹிஷாம் அப்துல்லா.!

Corona Vaccine Doses
Image Tweeted by BERNAMA

கடந்த 14 நாட்கள் நடமாட்டக்கட்டுப்பாட்டிற்கு பிறகு சபா மாநிலத்தில் மேலும் சில பகுதிகள் பச்சை மண்டலங்களாக மாறியுள்ளது. (Sabah Red Zone)

மேலும் 5 மாவட்டங்கள் மட்டுமே சபா பகுதியில் சிவப்பு மண்டல பட்டியலில் எஞ்சியுள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் தெரிவித்தார். (Sabah Red Zone)

“தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை” – மலேசிய அரசு.!

தொற்று இல்லாத பகுதி பச்சை மண்டலம், ஒன்று முதல் 20 வரை தொற்று எண்ணிக்கை இருந்தால் அது மஞ்சள் மண்டலம்.

அதேபோல 21 முதல் 40 வரை தொற்று எண்ணிக்கை இருந்தால் அது ஆரஞ்சு மண்டலம். மேலும் 40-க்கும் அதிகமாக தொற்று இருந்தால் அது சிவப்பு மண்டலம்..

மலேசியாவில் நாடுமுழுவதும் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைத்து வருகின்றது.

இன்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1268 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஆறு பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களின் எண்ணிக்கை என்பது 3,36,808 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1083 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 3,20,925 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் மலேசியாவில் 2 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 1246 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram