Sabah : மலேசியாவில் அனல் பறக்கும் சபா மாநில தேர்தல் களம்! தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை எப்போது..?

Sabah
Sabah Election

மலேசியாவில் சபா (Sabah) சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர் கட்சி தாவிய குற்றத்தினால், மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக  சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர்  வாரிசான் கட்சியின் துணைத்தலைவர் டத்தோ டேரல் லெய்கிங் அறிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்,  துரோகம் இழைக்கும் வகையில் கட்சி தாவியது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது முறையான நடவடிக்கை அல்ல.

எனவே மக்கள் பிரதிநிதிகளை மக்களே மீண்டும் முடிவு செய்யட்டும் என்பதற்காக தேர்தலை சந்திக்கும் பொருட்டு சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைத்த வாரிசான் கட்சியிலிருந்து, சில சட்டமன்ற உறுப்பினர்கள் விலகும் சாத்தியம் இருந்ததினால், மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் இனியும் தேவையா..? என்பதை இனி முடிவு செய்யும் பொறுப்பை மக்களிடமே விட்டுவிட்டோம் என கட்சியின் துணைத்தலைவர் டத்தோ டேரல் லெய்கிங் கூறினார்.

இந்த நிலையில் சபா சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.

எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி, சாபா மாநில சட்டமன்றத் தேர்தலில் 73 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டு வாரங்களில் முடிவு செய்யப்படும் என்று சாபா மாநில அம்னோ தலைவர் புங் மொக்தார் தெரிவித்துள்ளார்.

சாபாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டதால், அதன் முதல்வர் ஷாஃபி சட்டமன்ற கலைப்புக்குப் பரிந்துரைத்ததில் இருந்து அங்கு அரசியல் குழப்பம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறேன் – முன்னாள் மலேசிய பிரதமர்

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms