“2026ல் நிறைவுபெறும் ஆர்.டி.எஸ் திட்டம்” – போக்குவரத்து அமைச்சர் உறுதி.!

RTS Singapore
Image tweeted by MRT Malaysia

சிங்கப்பூர் மற்றும் ஜோஹோர் பரு ஆகிய நகரங்களை இணைக்கும் ஆர்.டி.எஸ் ரயில் திட்டம் 2026ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. (RTS Singapore)

நேற்று சிலாங்கூர் மாநில மன்னர் இப்­ரா­ஹிம் இஸ்­கந்­த­ரி­டம் இந்த உறுதியினை அளித்துள்ளார் மலேசியாவின் போக்­கு­வ­ரத்துத்துறை அமைச்­சர் வீ கா சியோங். (RTS Singapore)

“இதுவே அதிக அளவிலான தொற்று” – பீதியில் சிலாங்கூர் மக்கள்.!

ஜோஹோர் பரு, மலாய் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையே ரயில் இணைப்புத் திட்டம் தொடர்பான ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் இந்த ஒப்பந்தத்தை நிறைவு செய்ய இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முயற்சித்துள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் பல மாதங்களுக்கு முன்பு கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு குறித்து ஆண்டனி லோக் தனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவினை அப்போது அளித்தார்.

அந்த பதிவில், தாம் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானைச் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பில் பல விஷயங்கள் பரிமாறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கும் ஜோஹோர் பருவுக்கும் இடையிலான ரயில் இணைப்புத் திட்டத்தின் முன்னேற்றத்தை பற்றியும் விவாதித்ததாக அவர் கூறினார். (RTS Singapore)

மேலும் தானும் அமைச்சர் கோ பூனும் பரிமாறிய கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

4 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்துவரும் இந்த நிகழ்வில் சுமார் 222 பிரச்சனைகள் பேசி முடிவு காணப்படவேண்டியுள்ள நிலையில் 220 பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த திட்டம் 2026ம் ஆண்டு முடிவடையும் என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram