மலேசியாவில் உள்ள சாலைத் தடுப்புகள் – தேவையின்றி புகைப்படம் எடுத்தால் நடவடிக்கை

malaysia igp

நாட்டு மக்களை, பரவி வரும் நோயில் இருந்து பாதுகாக்காவே தங்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்தும் அதை பொறுப்படுத்தாமல் மலேசியா காவலர்கள் பணிபுரிந்து வருவதாக மலேசிய இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்துல் ஹமீத் படோர் கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் நாட்டில் மக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் அமைத்துள்ள தடைகளை தேவை இன்றி புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொடிய தொற்று நோய் நமது நாட்டில் பரவி உள்ளது. அந்த நோயின் சங்கிலியை உடைக்கவும் மக்களை காப்பாற்றவும் தங்கள் நிலையை பற்றிக்கூட கவலைப்படமால் மலேசியா போலீசார் உழைத்து வருகின்றனர். அதன் காரணமாகவே நாடு முழுவதும் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டாகவோ அல்லது மக்களுக்கு சிரமத்தை வேண்டும் என்று ஏற்படுத்தவோ இந்த தடைகளை ஏற்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை தற்போது நிலவி வரும் பொது நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.