மலேசியா : ‘வெளிநாட்டவர் தவறான அறிக்கை வெளியிட்டால் ஆவணம் ரத்து’ – குடிநுழைவுத்துறை

malaysia immigration
Image Tweeted by Immigration of Malaysia

மலேசிய நாட்டை பாதிக்கும் வண்ணம் அறிக்கை வெளியிடும் பட்சத்தில் அச்செயலை செய்யும் வெளிநாட்டவர்களின் பாஸ்கள் ரத்து செய்யப்படும் என்றும் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ khairul dzaimee Daud வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தாற்காலி வேலை அனுமதிக்கான பாஸ் வைத்திருப்போர், மாணவர் பாஸ்க்கள், குடியிருப்பு பாஸ் போன்ற பாஸ்க்கள் வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் சுயமாக ஒரு கருத்தினை பதிவிடும் முன் சற்று யோசித்து பதிவிடுங்கள் என்றும், அவர்கள் வெளியிடும் கருத்து மலேசிய அரசை பாதிக்கும் வண்ணம் இருக்கும்பட்சத்தில் அந்த நபரின் அனைத்து பாஸ்க்களும் கட்டாயம் ரத்து செய்யப்படும் என்றும், அவசியம் ஏற்பட்டால் அவர்கள் நாட்டில் இருந்தும் வெளியேற்றப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிட் 19 தொற்று காலத்தில் குடிநுழைவு மையத்தில் சுமார் 700க்கும் அதிகமான வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக கோவிட் சோதனை நடத்தி பாதுகாத்து வருவதாகவும். மலேசியா பாகுபாடு இன்றி செயல்பட்டு வருகின்றது என்பதையும் அவர் தெரிவித்தார்.