“Restoration MCO” : மலேசியாவில் மீட்சிக்கான இயக்கக் கட்டுப்பாடு இவ்வாண்டு இறுதி வரை நீட்டிப்பு..!

Muhyiddin
Image tweeted by Muhyiddin yassin

தற்போது உலகில் லட்சக்கணக்கான மக்களை வாட்டி வதைத்து வருகின்றது கொரோனா. அதே சமயம் நியூஸிலாந்து போன்ற சில நாடுகள் கொரோனா பிடியில் இருந்து முற்றிலும் விடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நோயின் தாக்கம் அண்டை நாடான இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மலேசியாவில் அண்மைக்காலமாக தொற்றின் அளவு சற்று குறைத்து வருகின்றது.

இதையும் படிங்க : திருச்சி, விஜயவாடா, ஹைதராபாத் : 339 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

இந்நிலையில் கடந்த சில மதங்களுக்கும் முன்பு நடத்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தொடர்ச்சியாக 28 நாட்கள் எந்தவித நோய் தொற்றும் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் நாம் கோவிட் 19ல் இருந்து முழுமையாக விடுபட்டதாக அறிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது restoration MCO எனப்படும் மீட்சிக்கான இயக்கக் கட்டுப்பாடு அமலில் வருவதாகவும் அறிவித்தார்.

மலேசியாவில் இந்த மீட்சிக்கான இயக்கக் கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் பலர் தளர்வுகளும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொற்று அதிகம் இல்லாத இடங்களில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளால் தடை இன்றி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மீட்சிக்கான இயக்கக் கட்டுப்பாடு எத்தனை நாட்கள் தொடரும் என்பது பல நாள் கேள்வியாக இருந்தது. இருப்பினும் வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியுடம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வு MCO முடிவடைய உள்ள நிலையில் இந்த மீட்சிக்கான MCO இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என்று மலேசிய பிரதமர் முஹிதீன் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Telegram      – https://t.me/malaysiatms