“தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை எப்போது தீரும்”- பிரிமாஸ் சங்கம்.!

Resturant Owners Association
Photo Courtesy Tamil Malar

தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனை எங்களுக்கு எப்போது தீரும் என்று பிரிமாஸ் சங்கம் தற்போது ஒரு கேள்வியை முன்வைத்துள்ளது. (Restaurant Owners Association)

மலேசியாவில் கொரோனா காரணமாக எல்லைகள் மூடப்பட்டது, தொழில்கள் முடக்கமடைந்தது இதனால் அந்நிய தொழிலாளர்கள் தாயகம் திரும்பினார். (Restaurant Owners Association)

“கொரோனா தடுப்பூசியால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டால்.?” – அரசின் புதிய அறிக்கை.!

PRIMAS சங்கத்தின் இந்த கோரிக்கை பல நாட்களாக முன்வைக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உலோகக்கடை, உணவகம், முடிதிருத்தும் கடைகள் போன்ற பல இடங்களில் அந்நிய தொழிலாளர்கள் இன்றி தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது.

மலேசியாவில் ஏற்கனவே கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையில் உள்ளூர் தொழிலார்கள் சம்பளம் குறித்து பல கேள்விகள் கேட்பதாகவும் அவர்கள் செய்யும் வேலையை அவர்களே தேர்ந்தெடுக்க விரும்புவந்தாகவும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் உள்ளூர் தொழிலார்கள் மீது பெரிய அளவில் நாட்டத்தை தாங்கள் செலுத்தவில்லை என்றும் அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியானது.

இதனால் வெளிநாட்டு தொழிலாளர்கள் மறுசீரமைப்பு திட்டத்தை அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.

குறிப்பாக இந்திய உணவகங்களில் ஆட்கள் பற்றாக்குறை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram