‘அது மக்கள் கையில் தான் உள்ளது’ – மலேசிய பாதுகாப்பு அமைச்சர்

ismayil sabri

மலேசியாவில் பரவி வரும் கொரோனா நோய் தொற்றால் ஆரம்பத்தில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை மார்ச் மாதம் 31ம் தேதி வரை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத காரணத்தால் மீண்டும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டை ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இத்தனை உயிரிழப்புகள் கண்ட பிறகும் மக்கள் இன்னும் அந்த தடையை சரியாக பின்பற்றாமல் இருப்பது வேதனை அளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள மலேஷியா பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்பிரி யாக்கோப் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டை மேலும் நீட்டிக்காமல் கவனித்துக்கொள்வது பொதுமக்களாகிய உங்களிடம் தான் உள்ளது என்று தெரிவித்தார். தற்போது இருக்கும் இந்த கட்டுப்பாடு மேலும் கடுமையாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் மலேசியாவில் இதுவரை பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறியதாக 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.