“இந்தியா வரும் பயணிகள் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு கோரலாம்” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.!

Institutional Quarantine
Image tweeted by India in malaysia

அண்டைநாடானா இந்தியாவை பொறுத்தவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் உலக அளவில் கொரோனா பரவளிலும் அந்நாடு முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்பட 23 நாடுகளை சேர்ந்த மக்கள் மலேசியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த தடையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இந்தியா செல்ல வேண்டிய மலேசிய வாழ் இந்தியர்களை தாயகம் அனுப்பிவைத்து வருகின்றது மலேசியா அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மிஷன் வந்தே பாரத் : கோலாலம்பூர் முதல் தமிழகம் வரை – விமான விவரத்தை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.!

இந்நிலையில் இந்தியா வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானங்களை பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்களை பிறகு நாடுகளில் இருந்து தாயகம் அழைத்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா உலக அளவில் இரண்டாவது (மக்கள் தொகை அடிப்படையில்) பெரிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது. வேலை மற்றும் வியாபார ரீதியாக பல லட்சம் மக்கள் வெளிநாடு சென்றிருந்த நிலையில் அவர்களை தற்போது மீண்டும் அழைத்து வருகின்றது.

தற்போது பிற நாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோருக்கு அனுதிமும் பல அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது ஏர் இந்தியா. இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அரசு அறிவிக்கும் கட்டாய தனிமைப்படுத்துதல் என்ற விஷயத்தை தவிர்க்க சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பயன்படுத்தி மக்கள் அரசு அறிவிக்கும் முகாமில் கட்டாய தனிமைப்படுத்துதலை தவிர்க்கலாம்.

வந்தே பாரத் திட்டத்தின் 7ம் கட்ட விவரங்களையும் அந்த நாடு தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

*  Facebook

* Telegram