“இந்தியா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 23 நாடுகள்” – குறிப்பிட்ட விசாக்களுக்கு தளர்வு அளித்த மலேசிய அரசு..!

Ismail Sabri yakob
Image Tweeted by Ismail Sabri yakob

உலக அளவில் பல நாடுகளில் குறிப்பாக அண்டை நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவின் பேகம் இன்னும் குறையவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

நேற்று ஒரே இந்தியாவில் 1200 பேர் இந்த கொரோனா காரணமாக இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் கொரோனா பரவல் உள்ள நாடுகளில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எதிர்வரும் குளிர்காலத்தை நினைவில் கொண்டு மலேசிய அரசு கடந்த திங்கள் முதல் ஒரு அதிரடி சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தது.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தோனேஷியா உள்ளிட்ட 23 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு முற்றிலுமாக தடையை விதித்து ஆணையிட்டது.

இதையும் படிங்க : “Sabah பகுதியில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று” – சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை..!

இந்நிலையில் இந்த தடை குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து கடந்த இரண்டு நாராக மலேசியாவில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

தற்போது இதற்கு சுமுக முடிவு காணும் வகையில் சில தளர்வுகள் அறிவித்துள்ளது மலேசிய அரசு. “வெளிநாட்டவர்கள் மற்றும் தொழில்முறை வருகை பாஸ் வைத்திருப்பவர்கள், நிரந்தர குடியுரிமை வைத்திருப்போர் மற்றும் Foreign Spouses of Malaysian citizen உள்ளிட்ட பாஸ் வைத்திருப்போருக்கு” தற்போது அனுமதி அளித்துள்ளது.

தடை விதிக்கப்பட்ட 23 நாடுகளில், மேற்குறிப்பிட்ட விசா வைத்திருப்போர் மலேசியாவிற்குள் வரலாம் என்றும். மேலும் அப்படி வருவோர் மலேசிய குடியுரிமை துறையிடம் ஒப்புதல் வாங்கியிருக்க வேண்டும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram