மலேசியா : டிசம்பர் மாத இறுதி வரை நீட்டிக்கப்படும் மின்சார கட்டண சலுகை..!!

Electricity Bill
Picture Courtesy : The Star

மலேசியாவில் தற்போது கொரோனா பாதிப்பின் அளவு கடந்த இரண்டு வாரங்களாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மக்கள் பொருளாதார ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி மலேசிய பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண தள்ளுபடி தற்போது மேலும் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சுமார் 7 மில்லியன் வீட்டு உபயோக மின்சார பயனாளர்களுக்கு 2 முதல் 50 சதவிகிதம் வரை மின்னசர கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்றும் இந்த சலுகை மேலும் அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31 2020 வரை நீட்டிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் தற்போது தொற்றின் அளவு குறைந்து வரும் நிலையில் சகஜ நிலை திரும்பி வருகின்றது. இருப்பினும் பொருளாதார ரீதியாக நாடு மீட்சி அடையாக சில காலம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.