“மலேசியாவில் மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறும் மூன்று முக்கிய இடங்கள்”

Red zone Malaysia
Image tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவை பொறுத்தவரை தலைநகர் கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களும் தற்போது சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது. (Red zone Malaysia)

மேற்குறிப்பிட்ட மூன்று நகரங்களில் தினமும் கணிசமான அளவில் தொற்று தொடர்ந்து பரவி வருவதால் அவை மீண்டும் சிவப்பு மண்டலத்தில் சேர்க்கப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது. (Red zone Malaysia)

“இந்தியர்கள் கணக்கெடுப்பில் உடனடியாக கலந்துகொள்ளவேண்டும்”

நேற்று மலேசியாவில் புதிதாக 1594 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சபா பகுதியில் தொற்றின் அளவு குறைந்து வரும் நிலையில் பிற இடங்களில் வருகின்றது.

தலைநகரில் நேற்று ஒரே நாளில் சுமார் 600-க்கும் அதிகமான நபர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் எண்ணிக்கை 1 லட்சத்தை தண்டியுள்ள நிலையில் தற்போது மூன்று முக்கிய நகரங்கள் சிவப்பு மண்டல பகுதிகளாக மாறியுள்ளன.

5 தினங்களுக்கு முன்பில் இருந்தே சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

அவ்வாறு அறிவிக்கப்பட்ட இடங்களில் 40-க்கும் மேற்பட்ட அளவில் கொரோனா தொற்று எண்னிக்கை பதிவாகி உள்ளது.

மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை நடப்பில் உள்ளது. மேலும் அதிக அளவில் பாதிப்பு பதிவாகும் நிலையில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது.

நேற்று ஒரே நாளில் 1181 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதித்த 85592 பேர் பூரண குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram

Twitter

* Instagram