சீனாவிற்கு எல்லா உதவிகளையும் செய்ய தயார் – மலேசிய பிரதமர் மகாதீர்

Mahathir

கொரோனா தொற்றால் வுஹான் மாகாணம் முழுதும் முடங்கியுள்ளது, கொரோனா ஒரு பிசாசு கட்டாயம் சீனா அந்த பிசாசினை விரட்டி வெற்றி பெரும் என்றும் சீன நாட்டு பிரதமர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அறிவித்தார். இன்னும் பத்து நாட்களுக்கு இந்த நோய் தொற்று முற்றிலும் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவத்தார். தயவு செய்து இந்த நோய் குறித்து வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் சீனா அண்டை நாடான இந்தியா மற்றும் மலேசியாவிடம் தங்களுக்கு உதவுமாறு நேசக்கரம் நீட்டியது, தங்கள் நாடுகளில் கொரோனா பாதிப்பு இல்லை என்றால் அண்டை நாட்டை காக்க தற்போது இரு நாடுகளும் முன்வந்துள்ளன. இரு நாடுகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்ப தயார் நிலையில் இருப்தாக இருநாட்டு தகவல்களும் தெரிவிகின்றன.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மலேசியா பிரதமர் மகாதீர், இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் இதுவரை மலேசியாவில் 7 பேர் கிருமி தொற்றால் பாதிகப்படுள்ளனர் என்று தெரிவிக்கப்படுள்ளது என்று கூறினார். மேலும் சீனாவிற்கு கையுறைகள், சுவாசக் கருவிகள் மற்றும் தேவையான உணவு போன்றவை கொடுத்து உதவ மலேசியா அரசு தயார் நிலையல் உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் மலேசியாவில் இந்த கிருமி தொற்று குறித்து வதந்தி பரப்பினால், கட்டாயம் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் வுஹான் நகரில் சிக்கி தவிக்கும் 78 மலேசியர்களை தாயகம் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் இரு நாட்டு பிரதிநிதிகளும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவத்தார்.