“மோனோ ரயில் மற்றும் ராபிட் பேருந்துகள்” – இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதி.!

Rapid Bus
Image tweeted by The Sun Daily

மலேசியாவில் இன்று திங்கள் (Rapid Bus) கிழமை முதல் மோனோ ரயில் சேவை, ராபிட் பேருந்து சேவை, எல்.ஆர்.டி மற்றும் எம்.ஆர்.டி ஆகிய சேவைகளின் அளவு குறைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை நேற்று அத்துறை சார்ந்த தலைவர் வீலா நோ செய்தியாளர்களிடம் அறிவித்தார். Rapid Bus சேவை என்பது பலரால் பயன்படுத்தப்படும் ஒரு சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக மலேசியாவில் 500-க்கும் அதிகமான அளவில் கொரோனா தொற்று இருந்து வருகின்றது. குறிப்பாக சபா பகுதியில் தான் அதிக அளவு தொற்று காணப்படுகின்றது.

இதையும் படிங்க : மூடப்படாத ஆழ்துளை கிணறு : சுஜித்தின் ஐந்து நாள் போராட்டம்..!

இந்நிலையில் மலேசியாவில் தற்போது மீண்டும் இடங்களில் ஊரடங்கு என்பது அமலுக்கு வந்த வண்ணம் உள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகின்றது.

இருப்பினும் வழக்கம் போல காலை 6 மணி முதல் எம்.ஆர்.டி, எல்.ஆர்.டி மற்றும் மோனோ ரயில் உள்ளிட்ட சேவைகள் நள்ளிரவு வரை வழக்கம்போல இருக்கும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கால அளவில் மாற்றம் இல்லை என்றபோது சேவைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வழக்கமான அளவு இல்லாமல் குறைந்த அளவிலான வண்டிகள் இயக்கப்படும்.

நேற்று ஒரே நாளில் மலேசியாவில் கொரோனாகாரணமாக 8 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது கொரோனா காரணமாக மலேசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 229ஆக உயர்ந்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram