“மலேசியா திரும்பும் வெளிநாட்டவர்கள்” – தனிமைப்படுத்துதலில் புதிய விதி.!

Quarantine Time
Image tweeted by Noor Hisham Abdullah

இன்று முதல் மலேசியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் காலம் என்பது 14 நாட்கள் என்ற அளவில் இருந்து 10 நாட்கள் என்ற அளவிற்கு குறைக்கப்படவுள்ளது. (Quarantine Time)

கடந்த ஜூலை 21ம் தேதி மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒரு புதிய தகவலை தெரிவித்தார். (Quarantine Time)

“ஒரே நாளில் 9 பேர் மரணம்” – 400ஐ தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை.!

இதுவரை பிறநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் தொற்று இல்லாதபட்சத்தில் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அணுமதிக்கப்பட்ட நிலையில் பலர் அதை மீறுவதாகவும்.

ஆகையால் இனி பிற நாடுகளில் இருந்து மலேசியா திரும்புவோர்கள் அரசு அனுமதிக்கும் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதற்கான கட்டணத்தினையும் அவர்கள் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மலேசியா சுகாதார அமைச்சகம் தங்களுடைய ஆதரவை தெரிவித்தது.

இந்த நடவடிக்கை கடந்த ஜூலை 24 2020 முதல் அமலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் அடைப்படையில் வெளிநாடுகளில் இருந்து வருவோர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அந்த கால அளவை 10 நாட்களாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆகவே, வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர், மற்றும் கொரோனா கண்டறியப்பட்ட மனிதரிடம் நெருக்கமாக இருந்தவர்கள் இனி 10 நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவித்தார்.

லண்டன், ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளும் தங்களுடைய நாடுகளில் இந்த விதியை அமல்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram